இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டை குறிப்பிடும் வகையில் வெளியாகியுள்ள முதல் நினைவு முத்திரையை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்துள்ளது.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்களை குறிப்பிடும் வகையில் இலங்கையின் பெருந்தோட்ட சமூகம் உள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை சென்று 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலைக் காடுகளில் உழைத்து வரும் தமிழர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாகும்.
சுவைக்குப் பெயர் பெற்ற சிலோன் டீ உருவாக்கி வருவதிலும் இவர்கள் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் பெருந்தோட்ட சமூகம். இதன் 200வது ஆண்டை கொண்டாடும் வகையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் நினைவு முத்திரையை அந்த அமைப்பின் நிர்வாகி நடிகர் ரஜினிகாந்திடம் நேரில் சந்தித்து கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையிலும் ரஜினிகாந்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதனால், ரஜினிகாந்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்றே ரசிகர்கள் இதனைக் குறிப்பிட்டு வருகின்றனர்.