பாலிவுட்டில் ‘ஜவான்’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லி தனது அடுத்தப் படத்தை சல்மான் கானை வைத்து இயக்க இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து தான் இயக்கிய முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார் இயக்குநர் அட்லி. இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக வசூல் ஈட்டி கவனம் ஈர்த்தது. இதற்கடுத்து மீண்டும் பாலிவுட்டிலேயே படம் இயக்குவாரா அல்லது கோலிவுட்டிற்கு திரும்புவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
நடிகர் விஜயின் கடைசிப் படத்தை இவர்தான் இயக்குவார் என்ற பேச்சும் முன்பு அடிபட்டது. ஆனால், தெலுங்கில் அல்லு அர்ஜூனுக்காக ஒரு கதை தயார் செய்து கொண்டிருக்கிறார் அட்லி எனத் தகவல் வெளியானது. இந்தப் படத்தில் இருந்துதான் அட்லி இப்போது விலகியுள்ளாராம். இதற்குக் காரணம் அவர் கேட்ட மலைக்க வைக்கும் சம்பளம் என்கிறார்கள்.
அட்லி கேட்ட சம்பளத்தைத் தயாரிப்புத் தரப்பு தர யோசித்ததால் விலகி இருக்கிறார். மீண்டும் பாலிவுட் பக்கம் வந்துள்ள அட்லி, அடுத்து சல்மான் கானை வைத்து படம் இயக்க இருக்கிறார். அட்லி சொன்ன கதை சல்மான் கானுக்குப் பிடித்துப் போக அவர் உடனே ஓகே சொல்லி விட்டாராம்.
சல்மான் கான் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த வருடம் அட்லி- சல்மான் கான் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் வாசிக்கலாமே...
திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்
சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!
5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!