நடிகர் அஜித் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். இதில் ’விடாமுயற்சி’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் ஷெட்யூலும் நிறைவடைந்தது.
’விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் அஜர்பைஜானில் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் அஜித், அதற்கு முன்பாக இன்று அதிகாலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.
விஐபி சுவாமி தரிசனத்தில் பட்டு வேட்டி சட்டை அணிந்தபடியே சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்துக்கு பெருமாள் சிலை ஒன்றை பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!