சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் கொரோனா சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்றது. படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியிலும் இந்தப் படம் ரீமேக் ஆவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கராவே இந்தியிலும் ‘சர்பிரா’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...