இயக்குநர் ராஜமெளலி மீது வருத்தம்... நடிகை மம்தா மோகன்தாஸ்!


மம்தா மோகன்தாஸ்

இயக்குநர் ராஜமெளலி தன்னை கிளாமர் உடைகள் அணிய சொன்னது வருத்தமாக இருந்தது என நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த படம் ‘மகாராஜா’. இந்தப் படத்திற்காக நடிகை மம்தா மோகன்தாஸ் ஊடகங்களுக்குப் பேட்டிக் கொடுத்திருந்தார். அதில் இயக்குநர் ராஜமெளலி தன்னை கிளாமரான உடைகள் அணியச் சொன்னது வருத்தமாக இருந்தது என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மம்தா மோகன்தாஸ்

ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான ’யமடோங்கா’ என்ற படத்தில் நடித்திருப்பார் மம்தா. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் தன்னை கிளாமரான உடைகள் அணிந்து நடிக்க வேண்டும் என்று ராஜமெளலி கூறியிருக்கிறார்.

’யமடோங்கா’ படத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ்...

’யமடோங்கா’ குறித்து அவர் பேசியிருப்பதாவது, “அந்தப் படத்தின் செட்டில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நபர்கள் இருந்தார்கள். அத்தனை பேர் இருக்கும்போது ராஜமெளலி சொன்னது எனக்கு வருத்தம்தான். சினிமா துறையைப் பற்றி கேள்விப்பட்டுதான் இங்கு வந்தேன். இருந்தாலும் சில தருணங்கள் இப்படி அமைந்து விடுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

மோடியின் கால்களில் விழுந்து பீகார் மக்களை நிதிஷ்குமார் அவமானப்படுத்தியுள்ளார்: பிரசாந்த் கிஷோர் கடும் விமர்சனம்!

x