'எதிர்நீச்சல்’ சீரியல் எனக்கு அவமானம்... நடிகர் வேலராமமூர்த்தி புலம்பல்!


நடிகர் வேலராமமூர்த்தி

'எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்தது தனக்கு அவமானம் என நடிகர் வேலராமமூர்த்தி கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ‘எதிர்நீச்சல்’. சமீபத்தில் 750 எபிசோட்களோடு இந்த சீரியல் நிறைவுக்கு வந்தது. இதில் மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. குறிப்பாக, அவர் பேசும் ‘ஏய் இந்தாம்மா’ வசனம் டிரெண்டானது.

எதிர்நீச்சல் தொடர்

ஆனால், அவரது எதிர்பாராத மறைவு சீரியலுக்குமே பேரிழப்பு என்றே சொல்லலாம். இவரது மறைவுக்குப் பிறகு நடிகர், எழுத்தாளர் வேலராமமூர்த்தி இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்தார். ஆனால், மாரிமுத்து இடத்தை அவர் பிடிக்கவில்லை என்று ரசிகர்கள் சொல்லி வந்தனர்.

மாரிமுத்து- வேலராமமூர்த்தி...

இந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து இதுபற்றி வேலராமமூர்த்தி சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். “’எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பரபரப்பாக சென்றது. ஆனால், இந்த சீரியல் ஏன் நடித்தேன் என்ற கேள்வி எனக்கு இருக்கிறது. ரசிகர்கள் கடைசி வரை என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இது எனக்கு அவமானம்” என்று அவர் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மோடியின் கால்களில் விழுந்து பீகார் மக்களை நிதிஷ்குமார் அவமானப்படுத்தியுள்ளார்: பிரசாந்த் கிஷோர் கடும் விமர்சனம்!

x