நடிகர் பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகியும் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை என்ற கேள்வி இருந்தது. இதுகுறித்தானத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’. இதில் நடிகர் பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். படம் கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியாகி இருந்தது.
படம் வெளியாகி மூன்று மாதங்கள் கடந்து விட்டது. ஓடிடி உரிமத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் 26ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்னும் ஓடிடியில் வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
படக்குழுவினர் ஆஸ்கர் விருதுகளுக்கும், சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் படத்தை அனுப்பத் திட்டமிட்டு இருக்கின்றனராம். அதற்கான, பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தக் காரணத்திற்காகவே ஓடிடி மற்றும் சாட்டிலைட் பேச்சுவார்த்தை மற்றும் எப்போது ஒளிபரப்புவது போன்ற விஷயங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறதாம். சீக்கிரம் ஒளிபரப்புங்கள் என்று சொல்லி, ஆஸ்கர் கிடைக்கவும் வாழ்த்து சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்.
இதையும் வாசிக்கலாமே...