விக்னேஷ்சிவனுடன் சண்டை போட்ட விஜய்சேதுபதி... வெளிவந்த உண்மை இதுதான்!


விஜய்சேதுபதி- இயக்குநர் விக்னேஷ்சிவன்

'நானும் ரெளடிதான்’ படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் விக்னேஷ்சிவனுடன் சேர்ந்து சண்டை போட்டேன் என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மகாராஜா’ வெளியாகி உள்ள நிலையில் தனது திரையுலக அனுபவம் பற்றிய பல விஷயங்களை விஜய்சேதுபதி பகிர்ந்துள்ளார்.

விஜய்சேதுபதி- இயக்குநர் விக்னேஷ்சிவன்

அதில், ’நானும் ரெளடிதான்’ படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் விக்னேஷ்சிவனுடன் தான் சண்டையிட்டது பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். “’நானும் ரெளடிதான்’ படப்பிடிப்பில் முதல் நாளே எனக்கும் விக்னேஷ்சிவனுக்கும் சண்டை வந்தது.

அவர் என் கதாபாத்திரத்தை வேறி மாதிரி நடிக்கும்படி சொன்னார். நான் அந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்ட விதம் வேறு மாதிரியாக இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிப்பது எளிதல்ல என்று விஷ்ணு விஷால் என்னிடம் சொன்னார். பாண்டி நல்ல பையன்தான். ஆனால், ஃபிராடு. அவன் அழும்போது எல்லோரும் சிரிக்க வேண்டும்.

விஜய்சேதுபதி- இயக்குநர் விக்னேஷ்சிவன்

இந்த கதாபாத்திரத்தை பற்றி நான் தெளிவாக புரிந்துக் கொள்ள கொஞ்ச நாள் எடுத்தது. அதேபோல, விக்கியிடம் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்காதே என்றெல்லாம் சொல்லி சண்டைப் போட்டிருக்கிறேன். இந்தப் புரிதல் வர எங்களுக்கு கொஞ்ச காலம் பிடித்தது” என்றார்.

x