திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் இருந்த கடைக்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் வெளி மாவட்டங்கள் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று கிளம்பியது. பேருந்தை சுப்பிரமணி என்ற ஓட்டுநர் இயக்கினார். பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.
பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது பிரேக் பிடிக்காத காரணத்தால் எதிரில் இருந்த ஸ்வீட் கடைக்குள் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் கடையில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்தார். மேலும் கடையில் இருந்த கண்ணாடிப் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் சேதமடைந்தன. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பேருந்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு பேருந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!
சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!