"வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது" என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், வாளுக்கு வேலி அம்பலத்தின் 223ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த முறையும் மீண்டும் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்திற்கு பாஜக கொடுத்திருக்க வேண்டும். ஒரு கேபினட் அமைச்சரே அமர வைக்க இந்த அரசுக்கு மனமில்லை. விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்கள். விருதுநகர் தேர்தலில் வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு. பொறுப்பில்லாத பேச்சை பிரேமலதா விஜயகாந்த் செய்கிறார். மூன்றாவது முறையாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக தோல்வியை தழுவி இருக்கிறது அதுதான் உண்மை. விஜயகாந்த் இருக்கும் பொழுது தேமுதிக விருதுநகர் தொகுதியில் தோல்வி தழுவி இருக்கிறார்கள்.
பாஜக ஆயுட்காலம் இந்த முறை பிகார் தேர்தலில் முடிந்து விடும். இந்தியா கூட்டணியில் பீகாரில் ஆட்சி அமையும். எப்போது பாஜக ஆட்சி அமைகிறதோ அப்போது எல்லாம் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. பலமான நாடு பாதுகாப்பான நாடு என கூறும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு தலை குனிய வேண்டும். பாஜகவின் வளர்ச்சியை பற்றி அதிமுக தான் யோசனை செய்ய வேண்டும். திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் பாஜகவின் வளர்ச்சி பெரிதாக இல்லை" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...