தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல், வெப்ப சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த நாட்களாக மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் நேற்று பரவலாக மழை பெய்தது. கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் நேற்று எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.