எங்க ஏரியா உள்ளே வராதே... தமிழ்நாட்டில் அசத்திய 5 வேட்பாளர்கள்!


சசிகாந்த் செந்தில், சச்சிதானந்தம், டி.ஆர்.பாலு

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்19-ம் தேதி நடைப்பெற்றது. முதற்கட்டமாக தமிழகத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து 7-ம் கட்டத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024

மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. பிரதான எதிர்கட்சியான அதிமுகவோ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

குறிப்பாக, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். அவரும் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இந்த நிலையில் இவ்வெற்றியை திமுக கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். நாற்பதும் நமதே என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்த தேர்தலில் தமிழக ஐந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகளைப் பெற்றார். 5,72,155 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.

கனிமொழி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் போட்டியிட்ட சச்சிதானம் 4,43,821 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 6,70,149 ஆகும்.

அருண் நேரு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,58,611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 4,42,009 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,40,729 ஆகும். பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அருண் நேரு பெற்ற மொத்த வாக்குகள் 6,03,209 ஆகும். அவர் 3,89,107 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

x