நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!


சீமான்

மக்களவைத் தேர்தல் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் தொகையை இழந்துள்ளதால் சீமான் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் முதல் ஆளாக 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டது. விவசாயி சின்னம் கடைசி வரை கிடைக்காத நிலையில் மைக் சின்னத்தில் அக்கட்சி போட்டியிட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் சேர்த்து 40 தொகுதிகளிலும் தனித்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. இக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

ஆனால் 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. குறிப்பாக தஞ்சாவூரில் போட்டியிட்ட ஹுமாயூன் ஒன்றரை லட்சம் வாக்குகள், சிவகங்கையில் போட்டியிட்ட எழிலரசி 1.63 லட்சம் வாக்குகள் பெற்றது தான் அக்கட்சி பெற்ற அதிகபட்ச வாக்குகளாகும். 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

திமுக, அதிமுகவிற்கு அடுத்த கட்சியாக சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குள் தள்ளி நாம் தமிழர் கட்சிக்கு முன்னுக்கும் வந்துள்ளது. கன்னியாகுமரியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. அதே போல கள்ளக்குறிச்சி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவை பின்னுக்குள் தள்ளி அதிக வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, திருச்சியில் அமமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளது.

சீமான்

அதே போல புதுச்சேரியில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி அதிக வாக்குகள் பெற்றுள்ளது. குறிப்பாக 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ஆனாலும், தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் தொகையை இழந்துள்ளது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

x