”12 வருஷத்துக்கப்புறம் இந்த இடத்துக்கு வந்துருக்கேன்” என விக்னேஷ் சிவன் நயன்தாராவோடு உருகியுள்ளார்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்கள் குழந்தைகளோடு தாய்லாந்து வெகேஷன் பறந்திருக்கின்றனர். அங்கிருந்து இந்த ஜோடி ஹாங்காங் டிஸ்னிலேண்டுக்கு போயிருக்கிறார்கள். அங்கிருந்து கியூட்டான புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் விக்கி, 12 வருடங்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன் என்றும் எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
சிம்பு, வரலட்சுமி நடிப்பில் அவர் இயக்கிய படம் ‘போடா போடி’. அந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக பர்மிஷன் வாங்க இங்கு வந்திருக்கிறார். ’காலில் செருப்பு கையில் ஆயிரம் ரூபாய் பணம் என இங்கு வந்த நாட்கள் நியாகம் இருக்கிறது.
ஆனால், இப்போது என்னுடைய அன்பான குழந்தைகள் மனைவியோடு இங்கு மீண்டும் வந்திருப்பது எமோஷனலாகவும் திருப்தியாகவும் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். நயன்தாராவும் விக்கி, குழந்தைகளோடு இருக்கும் கியூட்டான தருணங்களைப் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா ‘மண்ணாங்கட்டி’, ‘டெஸ்ட்’ படங்களை முடித்திருக்கிறார். விக்கி தற்போது ‘எல்.ஐ.சி’ படத்தின் ஷெட்யூல் பிரேக்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.