நடிகை நயன்தாரா தாய்லாந்தில் விக்னேஷ்சிவன், மகன்கள் உயிர், உலக்குடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நடிகை நயன்தாரா - விக்னேஷ்சிவன் இருவரும் தாய்லாந்தில் வெகேஷன் மூடில் உள்ளனர். இவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. நடிகை, தயாரிப்பாளர், பிசினஸ் வுமன் என பலதுறைகளில் பிஸியாக வலம் வரும் நயன், இப்போது தன் குழந்தைகள், குடும்பத்துடன் அதிகம் நேரம் செலவிடுவதை விரும்புகிறார்.
கண்ணும் கருத்துமாக தனது குழந்தைகள் உயிர் மற்றும் உலக்கை இவர் கவனித்து வருவதைப் பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். இப்போது, விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் தாய்லாந்து பறந்துள்ளார் நயன். விக்னேஷ் சிவன் தற்போது 'எல்.ஐ.சி' படத்தின் ஷெட்யூல் பிரேக்கில் உள்ளார்.
இதனால், இருவரும் குழந்தைகளோடு தாய்லாந்து கிளம்பி சென்றுள்ளனர். அங்கிருந்து விக்னேஷ் சிவனோடு செம ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நயன்தாரா இப்போது தனது குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
’உயிர், உலக் இருவரும் என்னுடைய ஆன்மா மற்றும் இதயம்’ என்று உருகும் கேப்ஷன் கொடுத்து குழந்தைகள் மீதான அன்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைகளுடன் நயன் இருக்கும் இந்த கியூட்டான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி கொடுத்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்