இனி சிங்கிள் இல்லை... நடிகர் பிரேம்ஜிக்கு சீக்கிரம் டும் டும் டும்; திருமண அழைப்பிதழ் வைரல்!


பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்தத் திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனான இவர் 44 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்தார். சமீபகாலத்தில் ஒரு பாடகியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாது படங்களில் நடித்து வந்தார்.

வைரலாகும் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ்

’எப்போது திருமணம்?’ என்ற கேள்வி விடாமல் துரத்த இந்த வருடம் நிச்சயம் திருமணம் என்ற உறுதி கொடுத்திருந்தார். இப்போது சொன்னபடி அவருக்கு திருமணம் நடக்க உள்ளது.

இந்து என்ற பெண்ணுடன் வருகிற ஜூன் 9 அன்று திருமணம் நடக்க இருக்கிறது. இந்த பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் நடக்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

x