கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி... தியானத்துக்கு முன்னதாக நெஞ்சுருக வழிபாடு!


கன்னியாகுமரி கோயிலில் மோடி

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி இன்று மாலை நெஞ்சுருக வழிபாடு நடத்தினார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை வழிபாடு செய்தார். சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தின் தியான மண்டபத்தில் இன்று மாலை தொடங்கி ஜூன் 1 மாலை வரை பிரதமர் மோடி தியானம் செய்கிறார்.

முன்னதாக பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பிரச்சாரத்தில் மோடி

சுவாமி விவேகானந்தர் தியானத்தின் வாயிலாக புதிய தரிசனம் கண்ட பெருமைக்குரிய இடத்தில் பிரதமர் மோடியும் தியானம் மேற்கொள்கிறார். இந்த பாறை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கவுதம புத்தரின் வாழ்வில் சாரநாத் சிறப்பு இடத்தைப் பெற்றது போல, சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் இந்தப் பாறையும் முக்கிய இடத்தைப் பெற்றது. நாடு முழுவதும் பயணம் மேற்கொண்ட விவேகானந்தர், அதன் நிறைவாக இங்கே 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார்.

புராணங்கள் மற்றும் அதையொட்டிய நம்பிக்கைகளின்படி, பார்வதி தேவியும் இதே இடத்தில் சிவபெருமானுக்காக காத்திருந்தபோது ஒற்றைக் காலில் தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது. தனது தியானத்தின் தொடக்கமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு இன்று மாலை வருகை தந்த பிரதமர் மோடி, கோயில் வளாகத்தில் வலம் வந்து நெஞ்சுருக வழிபாடு செய்தார்.

கன்னியாகுமரி என்பது இந்தியாவின் தென்கோடி முனையாக மட்டுமன்றி, இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் சந்திக்கும் இடமாகவும் விளாங்குகிறது. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சந்திப்புப் புள்ளியாகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டில் நன்கறியப்பட்ட கன்னியாகுமரியின் இந்த பின்னணி மற்றும் சிறப்புகள், பிரதமர் மோடி பயணத்தை அடுத்து வட இந்தியா உட்பட இதர மாநிலங்களிலும் அதிகம் சிலாகிக்கப்படுகிறது.

தேர்தல் பிரசாரங்களின் முடிவில் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வது பிரதமர் மோடியின் வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு கேதார்நாத் சென்ற அவர், 2014-ம் ஆண்டு சிவாஜியின் பிரதாப்கரையும் பார்வையிட்டார். இந்த வரிசையில் இம்முறை, மே 30 அன்று முதல் ஜூன் 1 கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தங்கி தியானம் மேற்கொள்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x