குடிகார காதலனை திருத்த தண்டவாளத்தில் குதித்த பெண்... ரயிலில் அடிபட்டு பலியான சோகம்


ரயிலில் அடிபட்டு பெண் பலி

குடிப்பழக்கத்துக்கு அடிமையான காதலனை அச்சுறுத்தி திருத்தும் நோக்கில் தண்டவாளத்தில் குதித்த பெண் ஒருவர், எதிர்பாராது ரயிலில் அடிபட்டு பலியாகி உள்ளார்.

ஆக்ராவில் ராணி என்ற 38 வயதுப் பெண் கிஷோர் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயான ராணி, கணவனின் குடிப்பழக்கம் காரணமாக எழுந்த சச்சரவில் தனியாக பிரிந்து வாழ்ந்தார். 3 மகன்களில் 2 பேர் ராணியுடன் வாழ்ந்து வந்தனர். கணவர் துணையின்றி தனியே வாழ்ந்து வந்த ராணிக்கு கிஷோர் என்பவர் அறிமுகமானார்.

குடி நோயாளி

ராணி - கிஷோர் இருவரும்நட்பு ரீதியில் பழகி வந்தவர்கள் ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழத் தலைப்பட்டனர். ஆனால் முதல் வாழ்க்கை தந்த படிப்பினையில் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதற்கு மட்டுமே ராணி சம்மதித்தார். மேலும், குடிப்பழக்கம் கொண்ட கணவனால் தான் அடைந்த வேதனைகளை பட்டியலிட்ட ராணி, அது போல கிஷோர் இருக்கக்கூடாது என நிபந்தனை விதித்தார். நிபந்தனைக்கு கட்டுப்பட்ட கிஷோருடன் பின்னர் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

லிவ் இன் ரிலேஷன்சிப் முறையில் ஒரே வீட்டியில் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். சுமார் ஒரு வருடம் வரை ராணி - கிஷோர் வாழ்க்கை சுமுகமாக சென்றது. கிஷோரை முறைப்படி திருமணம் செய்துகொண்டு வாழவும் ராணி முடிவு எடுத்திருந்தார். அதற்கு கிஷோரும் மகிழ்வுடன் சம்மதித்து இருந்தார். ஆனால் அதற்குள் கிஷோரும் குடிப்பழக்கில் சறுக்கி விழ, அவர்கள் குடும்பத்தில் குழப்பங்கள் எழ ஆரம்பித்தன.

கிஷோரின் குடிப்பழக்கத்தை நிறுத்த பல உபாயங்களில் ராணி முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அவற்றில் எதுவும் நடைமுறைக்கு உதவவில்லை. நேற்றும் இதே போன்று ராணி - கிஷோர் இடையிலான வாய்த்தகராறு வெடித்தது. அந்த சண்டை மூண்ட நேரத்தில், இருவரும் ராஜா மண்டி ரயில் நிலையத்தில் தங்கள் ரயிலுக்காக காத்திருந்தனர்.

ரயில்

அப்போது கிஷோரை அச்சுறுத்தும் நோக்கில் ராணி ஒரு விஷப் பரீட்சையில் இறங்கினார். கிஷோர் குடிப்பழக்கத்தை நிறுத்தாவிடில், இது போன்று தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கிஷோரிடம் தகராறு செய்தார். மேலும் கிஷோருக்கு பயத்தை உண்டுபண்ணும் நோக்கில் தண்டவாளத்தில் குதித்தவர், பின்னர் எழுந்து வர முயற்சித்தார். ஆனால் அவர் தண்டவாளத்தில் ஏறும் முன்னதாக, அந்த ரயில் தடத்தில் வேகமாக விரைந்து வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலைக் கண்டு அலறினார்.

உதவிக்கு கிஷோரும், ரயில் நிலைய பணியிலிருந்த ரயில்வே போலீஸாரும் விரைந்து வந்தனர். ஆனபோதும் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டதில் பலத்த காயமடைந்தார். எஸ்என் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி, சிகிச்சை பலனின்றி இன்று பலியானார்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

x