என்னைத் தவறாக புரிந்து கொள்கிறார்கள்... நடிகை ராஷ்மிகா வேதனை!


ராஷ்மிகா

”பட புரோமோஷன்களுக்காக செல்லும் போது, அங்கு அவர்களுடைய மொழியில் பேச சொல்கிறார்கள். அந்த மொழியை நான் சரியாக பேசவில்லை என்றால் அதை அவமரியாதை செய்வதாக தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்” என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்துள்ளார்.

’புஷ்பா2’, ‘குபேரா’ என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ராஷ்மிகா. இதில் ‘புஷ்பா2’ படத்தின் இரண்டாவது பாடலான ‘கப்புள் சாங்’ நாளை காலை வெளியாக இருக்கிறது. நேற்று ‘கம் கம் கணேஷா’ என்ற திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. அதில், கலகலப்பாக பல விஷயங்களைப் பேசி இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் தெலுங்கில் பல விஷயங்களை உரையாடி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகாவை டேக் செய்து, “உங்களுக்கு மொழிகள் கடந்து பல இடங்களிலும் ரசிகர்கள் உள்ளார்கள். உங்களை நாங்கள் பார்த்து ரசிப்பது போலவே, நீங்கள் பேசுவதையும் ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், நீங்கள் பெரும்பாலும் தெலுங்கிலேயே பேசியிருப்பதால் எங்களுக்குப் புரியவில்லை. ஆங்கிலத்தில் பேசினால் நாங்களும் ரசிப்போம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

அதற்கு ராஷ்மிகா, “இனிமேல் நான் முடிந்தளவு ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்கிறேன். இதனால், நீங்கள் எங்கிருந்தாலும் நான் பேசுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், நான் எங்கு போனாலும் அவர்களின் மொழியில் பேச சொல்கிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா

அந்த மொழியை நான் சரியாக பேசவில்லை என்றால் நான் அவமதிப்பதாகவோ அல்லது அந்த மொழியே எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை என்றோ தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இது எனக்கு வருத்தமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார் ராஷ்மிகா.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

x