காதல் பிரேக்கப்... சூப் கேர்ளாக மாறி பாட்டுப் போட்ட ஸ்ருதிஹாசன்!


காதலர் சாந்தனுவுடன் நடிகை ஸ்ருதிஹாசன்

சாந்தனுவுடனான பிரேக்கப்புக்குப் பிறகு ‘செல்ஃப்- லவ்’ பற்றி உருக்கமாக பாடல் பாடியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

பிரபல டாட்டூ ஆர்டிஸ்ட் சாந்தனுவைக் காதலித்து வந்தார் ஸ்ருதி. இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். ஆனால், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பரஸ்பரம் பிரிந்தனர்.

இதனை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வந்த லைவ்வில் உறுதிப்படுத்திய ஸ்ருதிஹாசன், அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கும் தான் ரெடி என்றார். தொடர்ச்சியாக ஃபோட்டோஷுட், ரசிகர்களுடன் உரையாடல் என பிரேக்கப் சோகத்தில் இருந்து வெளியே வர முயன்று கொண்டிருப்பவர், இப்போது சூப் கேர்ளாக மாறி பாடல் ஒன்றை பாடி பகிர்ந்திருக்கிறார்.

’நீ என்னை மீண்டும் பார்க்க முடியாது. உனக்கான கதவுகளை மூடி அந்த சாவியை நான் விழுங்கி விட்டேன். அது எனக்கு இனிப்பாக இருந்தது. இனி அது எனக்குத் தேவையில்லை’ என்ற ரீதியில் பாடல் வரிகளை எழுதி இசையமைத்திருக்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதிஹாசன்

இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘ஃப்ரீ ஸ்டைலில் பாடல் எழுதும் முறைக்கு நான் திரும்பி விட்டேன். குளத்தின் அடியில் ஒளியைக் கண்டுபிடிப்பதற்காக நீந்தினேன். ஆனால், அங்கு சேறும் சகதியுமே இருந்தது. வாழ்க்கை எவ்வளவு அழகானதோ அதே அளவுக்கு பயமுறுத்தவும் செய்கிறது’ எனக் கூறியுள்ளார் ஸ்ருதி.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

x