'GOAT' படத்திற்கு முன்பே இந்த விஷயத்தை செய்த விஜய்... தீயாய் பரவும் தகவல்!


நடிகர் விஜய்

'GOAT' படத்திற்கு முன்பே நடிகர் விஜய் ‘கத்தி’ படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்த விஷயத்தை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் 'GOAT' படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்திற்கான புரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியாகிறது.

விஜய், யுவன் ஷங்கர் ராஜா

இந்த நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த யுவன் ஷங்கர் ராஜா 'GOAT' படத்தில் முதல் முறையாக இரண்டு பாடல்களை விஜய் பாடியிருப்பதாக சொல்லி இருந்தார். இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும், தான் நடித்திருந்த படத்தில் முதல் முறையாக விஜய் இரண்டு பாடல்களைப் பாடவில்லை என்ற செய்தியை ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

’கத்தி’ படத்தில் விஜய்

இதற்கு முன்பு விஜய் நடித்திருந்த ‘கத்தி’ படத்திலேயே அனிருத் இசையில் ‘செல்ஃபி புள்ள’ பாடலோடு, 'பேட் ஐ' என்ற வில்லன் தீம் பாடலையும் அவர் பாடியிருக்கிறார். ஆனால், அது தீம் பாடல் என்பதால் பெரிதாக கவனம் பெறாமல் போனது.

இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு ரசிகர்கள் 'GOAT' படத்தில் விஜய் இரண்டாவது முறையாக இரண்டு பாடல்களை ஒரே படத்தில் பாடியுள்ளார் எனக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x