பைக் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து முத்தம்... காதல் ஜோடியை அதிரடியாக கைது செய்த போலீஸார்!


கைதான ஜோடி

பைக் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து தனது காதலிக்கு முத்தம் கொடுத்த இளைஞரையும் அவரது காதலியையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரித்துள்ளனர்.

சமூகவலைதளத்தில் எதாவது கோக்குமாக்கு செய்து பிரபலமாகிவிட வேண்டும் என்றுதான் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரியாமலேயே அவர்கள் செய்து கைதாவதுதான் பரிதாபம்.

அப்படி ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் பைக் பெட்ரோல் டேங்க் மீது தனது காதலியை அமரவைத்து முத்தமிட்டபடி சென்றிருக்கிறார் இளைஞர் ஒருவர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, இந்த ராஜஸ்தான் ஜோடியை கைது செய்த காவல்துறை, விசாரணை நடத்தி வருகிறது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டி பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக போலீஸார் இவர்களை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் பெயர் முகமது வாசிம் (25). கோட்டா மாவட்டத்தில் உள்ள கைதுன் நகரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதான ஜோடி

இந்த ஜோடி மீது ஐபிசி பிரிவு 294 (பொது இடத்தில் ஆபாசமான செயல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஜோடியை போலீஸார் வீடியோ எடுத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். மேலும், இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் முகமது வீடியோவில் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

x