அடடா மழை... அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களை நனைக்கப் போகிறது!


மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. சர்வசாதாரணமாக 108, 110 டிகிரி என வெயில் கொளுத்தியதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

கோடை வெயில்

மேலும், எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெப்ப அலை, அதைத் தொடர்ந்து அக்னி நட்சத்திரம் என கோடையில் தகித்து வந்த பொதுமக்களுக்கு ஆறுதலாக கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் குளிர்ச்சியான கால நிலை மாறி ஓரளவுக்கு பொதுமக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று துவங்கி, வரும் 21ம் தேதி வரை கனமழை வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்திருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

x