தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பு நிலையை விட குறைவாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற மே 22ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் பரவலாக கனமழையும், அதிகனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார்குளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!
சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!
அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!
இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!
அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!