செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து கடந்த 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மாதிரி பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, 2 வளர்ப்பு நாய்கள் பாய்ந்து கடித்தன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாயார், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். படுகாயமடைந்த சிறுமிக்கு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, நாயின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீஸார் கைது செய்தனர். மேலும், அவருடைய மனைவி மற்றும் மகன் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், அந்த நாய்களை வளர்ப்பதற்கான உரிமத்தை புகழேந்தி வாங்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, "நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயமாக லைசென்ஸ் பெற வேண்டும். அவற்றுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்திருந்தார். இதையடுத்து, நாய்கள் உட்பட செல்லப்பிராணிகளுக்கு வளர்ப்பதற்கு உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் குவியத் தொடங்கின.
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2300 பேர் விண்ணம் செய்துள்ளனர். இதுவரை 930 பேருக்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் இதுவரை 272 பேர் மட்டும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்ற நிலையில், உரிமம் பெறுவது கட்டாயம் என்று மாநகராட்சியின் அறிவிப்பை அடுத்து செல்லப்பிராணி உரிமையாளர்கள்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!
பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!
ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!
16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!