ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!


ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல் சென்றடையும் விதமாக தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய தளத்தை ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜுகேஷன்' என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது.

அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றை வழங்குவதில் பள்ளிக்கல்வித்துறை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. அதற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளம் வாயிலாக அரசு, அரசு உதவி
பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி, அரசின் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனாலும் இந்த எமிஸ் தளத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர்களின் எண்கள் சுமார் 1 கோடியே 16 லட்சம் செல்போன் எண்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. அவற்றுள் தற்போது உபயோகத்தில் உள்ள எண் எவை? என்பதை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனை சரிசெய்யும் விதமாக தற்போது செல்போன் எண் சரிபார்க்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 5 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கப் பட்டிருக்கின்றன.

100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றதும், பள்ளிக்கல்வித்துறைக்கும், பெற்றோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய தளத்தை 'டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜுகேஷன்' என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது.

இந்த தளத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பள்ளி கல்வித்துறை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. அது தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. இந்த புதிய தளத்தில், ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ம் தேதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x