வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகள்... டெல்லி தொகுதிகளின் நிலை இதுதான் !


டெல்லி இஸ்லாமியர்கள்

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகளாக முஸ்லிம்களின் வாக்குகளே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மே 25-ம் தேதியன்று நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெற முஸ்லிம் களின் வாக்குகளை கணிசமாகப் பெறவேண்டிய நிலை உள்ளது. இந்த ஏழு தொகுதிகளிலும் முஸ்லிம் வாக்குகள் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.

வடகிழக்கு டெல்லி தொகுதியில் மற்ற தொகுதிகளை விட மிக அதிகமாக முஸ்லிம்கள் 20.7 சதவீதம் உள்ளனர். கிழக்கு டெல்லி தொகுதியில் முஸ்லிம்கள் 16.8 சதிவீதம் உள்ளனர். மிகப்பழமை வாய்ந்ததும் 1952 முதல் உள்ளதுமான புதுடெல்லி தொகுதியில் 16.8 சதிவீதம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதைவிட குறைவாக சாந்தினி சவுக் தொகுதியில் 14 சதவீதமாக முஸ்லிம் வாக்குகள் உள்ளன.

மற்றொரு தொகுதியான வடமேற்கு டெல்லியில் முஸ்லிம்கள் 10.6 சதிவீதம் உள்ளனர். இது டெல்லியின் ஒரே தனித்தொகுதியாக உள்ளது. தெற்கு டெல்லி தொகுதியில் முஸ்லிம்கள் இதர தொகுதிகளை விடக் குறைவாக ஏழு சதவீதம் உள்ளனர். மேற்கு டெல்லியில் இதர அனைத்து தொகுதிகளை விடக் குறைவாக முஸ்லிம் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.08 சதவீதமாக உள்ளது.

ஆகவே, இந்த தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களை நம்பியே வேட்பாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த ஏழு தொகுதிகளிலும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணிகளின் சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x