பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!


அமித் ஷா வீட்டில் விருதாளர்கள்

பத்ம விருது வழங்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரவு விருந்து அளித்து சிறப்பித்தார்.

நடிகர் சிரஞ்சீவியை வரவேற்கும் அமித் ஷா

கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டன. முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, வேளாண்மை விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோர்களுக்கு பாரத ரத்னா விருது உட்பட மொத்தம் 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

விருதாளர்களுடன் அமித் ஷா

இதில் தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமண்யம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் 30-ம் தேதி முதல் கட்டமாக விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று மாலை இரண்டாம் கட்டமாக விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு, விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்தார். அப்போது விஜயகாந்த்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை அவரது மனைவி பிரேமலதா, குடியரசு தலைவரிடம் பெற்றுக்கொண்டார்.

நேற்று விருது பெற்ற அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்து சிறப்பித்தார். அவர்களை வாசலிலேயே நின்று வரவேற்ற அமித்ஷா அவர்களுடன் அமர்ந்து உணவருந்தியும், உரையாடியும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

x