காணொலி காட்சி வாயிலாக ஆஜரான செந்தில் பாலாஜி: 14வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!


அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்களை அமலாக்கத்தையினர் டிரங்கு பெட்டியில் தாக்கல் செய்தனர்.

ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் 14வது முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் ஜாமீன் கோரி 3வது முறையாக தாக்கல் செய்த மனு வரும் திங்கட்கிழமை (ஜனவரி 8) விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு குறித்துப் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது?! போலீஸார் குவிந்ததால் பதற்றம்!

x