அரசியலிலும் அவர் கேப்டன்... விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம்!


விஜயகாந்த், மோடி

``சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்'' என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எ.வ.வேலு, திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மோடி, கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

மோடி

அவர் பேசியிருப்பதாவது, “கடந்த 2023வது வருடத்தின் கடைசி சில வாரங்கள் கடினமானதாக இருந்திருக்கிறது. கனமழை மக்களைக் கடுமையாக பாதித்தது. மேலும், சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்திருக்கிறோம். சினிமாவில் மட்டுமல்ல அவர் அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார். திரைப்படங்களில் அவரது செயல்பாடு காரணமாக மக்களின் இடத்தில் தனி இடம் பிடித்தார். அரசியல்வாதியாகவும் தேசிய நலனுக்கு அவர் முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார். அவருக்கு என் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன். அவரது குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இதுமட்டுமல்லாது, மறைந்த விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார் மோடி.

இதையும் வாசிக்கலாமே...


திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்... இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

11 மணி நேர போராட்டம்... ஆழ்துளையில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு; சிகிச்சை பலனின்றி பலியான சோகம்!

x