கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!


நயினார் நாகேந்திரன்

"தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் கைதானவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான். ஆனால், எனக்கும் அந்த பணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 4 கோடி என்னுடைய பணம் இல்லை. அந்த பணத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக மே 2-ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளேன். இந்த விவகாரம் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்து நடந்தது போல் உள்ளது. இதை நான் அரசியல் சூழ்ச்சியாகத்தான் பார்க்கிறேன். யாரோ கொண்டு சென்ற 4 கோடி பணம் விவகாரத்தில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட நபர்கள்.

இதுதொடர்பான கேள்வி தொடர்ந்து என்னிடம் கேட்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்களிடம் எத்தனையோ கோடியை எல்லாம் பறிமுதல் செய்தார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, இந்த 4 கோடிக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

அது என்னுடைய பணம் இல்லை என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இருந்தும் தொடர்ந்து கேள்விக் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். எனக்கு தெரிந்தவர்கள் பணத்துடன் பிடிபட்டால், அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

x