’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..!


வீரலட்சுமி- சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி பணம்பறித்தாக இளைஞர் ஒருவர் பேசும் ஆடியோவை வெளியிட்டு வீரலட்சுமி பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

சீமான்

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தவர் வீரலட்சுமி. ஆனால் விஜயலட்சுமி ஒரு கட்டத்தில் வீரலட்சுமி தம்மை கஸ்டடியில் வைத்து அடைத்து சித்ரவதை செய்வதாக புகார் கூறியதுடன் சீமானுக்கு எதிரான புகாரையும் வாபஸ் பெற்றுவிட்டார். அத்துடன் பெங்களூர் சென்றுவிட்டார் நடிகை விஜயலட்சுமி.

ஆனால் விஜயலட்சுமியை ஆதரித்ததால் வீரலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான மோதல் தொடருகிறது. வீரலட்சுமி மன்னிப்பு கேட்க கோரி சீமானும், சீமான் மன்னிப்பு கேட்க சொல்லி வீரலட்சுமியும் வழக்கு, மான நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ்... என இருதரப்பும் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சீமானுக்கு எதிராக புதிய வீடியோ ஒன்றை வீரலட்சுமி வெளியிட்டு புதிய பரபரப்பைக் கூட்டியுள்ளார். அதில், இலங்கைத் தமிழர்களுக்காக எண்ணற்ற தமிழர்கள் பாடுபட்ட நிலையில், இலங்கை தமிழர்களை சீமான் ஏமாற்றி பணம் பறித்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் இலங்கைத் தமிழில் பேசும் இளைஞர் ஒருவர், ஆர்.கே. நகர் தேர்தல் தொடங்கி பலத் தேர்தல் செலவுக்காக சீமானுக்கு பணம் கொடுத்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது பரவி வரும் நிலையில், அடங்கி இருந்த வீரலட்சுமி - சீமான் மோதல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

x