விவசாய நீர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் @ கோவை


கோவை: ‘சிறுதுளி’ அமைப்பு சார்பில் விவசாய நீர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் உக்கடம்-சுங்கம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள சிறுதுளி நொய்யல் வாழ்வு மைய வளாகத்தில் நடந்தது.

‘துளித் துளியாய் சிறுதுளியாய்’ என்ற 75 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, விவசாய நீர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 150 விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுதுளி உச்ச அமைப்பு உறுப்பினர்கள் பிரபுராம், எஸ்.ஜெ.பாலகிருஷ்ணன், மருதாச்சலம் மற்றும் ஷாந்தினி பாலு செய்தனர். நிலையான வேளாண்மை மற்றும் பண்ணைகளில் அதிகப்படியான நீர் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.

வேளாண் நடைமுறைகளில் நிலையான மற்றும் கவனமுள்ள நீர் பயன்பாட்டுக்கு விவசாயிகள் ஒன்றுபட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாய நிலங்களிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ள நீர்த்தேக்கங்களையும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

x