2026-ல் சிஎஸ்கே போட்டி... கட்சிப் பெயரை அறிவித்தார் கூல் சுரேஷ்!


வாக்களித்துவிட்டு வந்த கூல் சுரேஷ்

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கூல் சுரேஷ் தனது கட்சிக்கு சிஎஸ்கே என்று பெயர் வைத்துள்ளார்.

கூல் சுரேஷ்

மக்களவைத் தேர்தலில் இன்று நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்து வரும் நிலையில் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான கூல் சுரேஷ் சென்னையில் இன்று வாக்களித்தார்.

தனது வாக்கினை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக தெரிவித்தார். "2026ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கூல் சுரேஷ் கட்சி போட்டியிடும். அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை தெரிவிப்போம். எங்கள் கட்சியின் பெயர் சிஎஸ்கே (CSK). அதாவது Cool Suresh katchi, இதனை விரைவில் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.

கூல் சுரேஷ்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நடிகர் விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில் ஏற்கனவே மன்சூர் அலிகான் போன்றவர்கள் அரசியலில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் 2026 தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

x