பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!


சத்ய பிரதா சாகு

மதியம் ஒரு மணி நிலவரப்படி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 46.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

தமிழகத்தில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். கடும் வெயில் வாட்டி வதைத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை வாக்காளர்கள் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பதிவாகியுள்ளது. மதியம் ஒரு மணி நிலவரப்படி பொள்ளாச்சி தொகுதியில் 46.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு

கோவை மக்களவைத் தொகுதியில் 30.06 சதவீதமும், ஆரணியில் 38.71 சதவீதமும், நாகையில் 43.10 சதவீதமும் திருவண்ணாமலையில் 39 சதவீதமும் பதிவாகி உள்ளது. கடலூர் தொகுதியில் 35.55 சதவீதமும் அரக்கோணத்தில் 40.72 சதவீதமும், மயிலாடுதுறையில் 40.50 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் மதியம் ஒரு மணி நிலவரப்படி 34.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மக்களவைத் தொகுதியில் 43.54 சதவீதமும், கள்ளக்குறிச்சி 46.06 சதவீதமும், பெரம்பலூர் தொகுதியில் 45.86 சதவீதமும், திருச்சியில் 38.14 சதவீதமும், புதுச்சேரியில் 45 சதவீதமும் , தூத்துக்குடியில் 39.11 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 40.05 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யப் பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x