அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்.. செத்தால்கூட அரைஞாண் கயிற அத்துட்டுதான்... வைரலாகும் விஜயகாந்த் பேச்சுகள்!


தேமுதிக பொதுக்கூட்டத்தில், ‘’அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்.. செத்தால்கூட அரைஞாண் கயிற அத்துட்டுதான் பொதைக்கிறாங்க.. உங்க வீட்டுக்கு வந்தா சோறு போடமாட்டீங்க’’ என தொண்டர்கள் முன்னிலையில் விஜயகாந்த் பேசிய பேச்சுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொதுக்கூட்ட மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசிய வீடியோக்களை தற்போது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு விஜயகாந்தை நினைவு கூர்ந்து வருகின்றனர். பேசியே திராவிட இயக்கங்கள் வளர்ந்ததாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் கூறுவார்கள். அவர்கள் பாணியிலேயே பொதுக்கூட்ட மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசி எதிர்கட்சி தலைவர் என்ற அரியணையை அலங்கரித்தவர் விஜயகாந்த். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களின் நெஞ்சங்களில் விஜயகாந்துக்கு தனி இடம் இருந்தது.

இன்று காலை சிகிச்சைப் பலனின்றி, நடிகர் விஜயகாந்த் காலமான நிலையில், அவர் தேமுதிக பொதுக்கூட்டங்களில் பேசிய பழைய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக ‘பொட்டு வச்சு தங்கக் குடம்’ பாடல் பின்னணியில் விஜயகாந்த் மேடைக்கு வருவது, ’’அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்... செத்தா கூட அரைஞாண் கயிற அத்துட்டுதான் பொதைக்கிறாங்க.. உங்க வீட்டுக்கு வந்தா சோறு போடமாட்டீங்க.. செத்தா எனக்கொரு இடம், என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு ஒரு இடம் கிடைச்சா போது’’ என அவர் பேசிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x