நாளை வாக்குப்பதிவு... நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!


படுகொலை செய்யப்பட்ட தவிட்டுராஜ்

விருதுநகர் அருகே நேற்று மாலை, டீ குடித்துக் கொண்டிருந்த திமுக பிரமுகரை, 3 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையோரம் உள்ள டீக்கடையில் ஒருவர் டீ குடித்துக் கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நபர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொழில், அரசியல் முன்விரோதத்தில் கொலையா என போலீஸார் தீவிர விசாரணை

போலீஸாரின் விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயர் தவிட்டுராஜ் (60) என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தவிட்டுராஜ், திமுகவின் கிளைச் செயலாளராக பதவி வகித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொலை சம்பவம் நடந்த இடத்தில் போலீஸார் தீவிர விசாரணை

கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் முன்விரோதம் காரணமா திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

x