இந்தியர்களை பாதுகாக்கும் அடையாளம் வீர்பால் திவாஸ்: பிரதமர் மோடி


பிரதமர் மோடி.

இந்தியர்களை பாதுகாக்கும் அடையாளம் வீர்பால் திவாஸ் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

வீர்பால் திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சீக்கியர்களின் 10வது குரு கோவிந்த் சிங். இவரது இளம் மகன்கள் சாஹிப்சாதா சோராவர் சிங் (9), சாஹிப்சாதா ஃபதேஹ் சிங் (6) ஆகியோர் சீக்கிய மதத்தின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க தங்களது இன்னுயிர்களை கடந்த 1705ம் ஆண்டு இதே நாளில் தியாகம் செய்தனர்.

இவர்களின் பெருமை, புகழை நினைவு கூரும் வகையில் டிசம்பர் 26-ம் தேதி வீர்பால் திவாஸ் தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி அறிவித்தார்.

அதன்படி, டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வீர்பால் திவாஸ் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “வீர் பால் திவாஸ் என்பது பாரதியாவின் (இந்தியர்களின்) பாதுகாப்புக்காக எந்த அளவுக்கும் செல்வதற்கான அடையாளமாகும். இன்று, தேசத்தின் 'அமிர்த காலத்தில்' பல காரணிகள் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் புகழ்பெற்ற அத்தியாயத்தை எழுதுகின்றன. இன்று, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இந்த மாபெரும் இளைஞர் சக்தி, நாட்டை எந்த உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது "என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

குட்நியூஸ்... 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு; ஜனவரி 2-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு!

x