மருத்துவர் இல்லாமல் நடந்த மருத்துவ முகாம்: சிவகங்கை அருகே நரிக்குறவர்கள் வேதனை


சிவகங்கை பழமலை நகரில் மருத்துவர் இல்லாமல் நடைபெற்ற நடமாடும் மருத்துவமனை மருத்துவ முகாம்.

சிவகங்கை: சிவகங்கை அருகே நடமாடும் மருத்துவமனை முகாம் மருத்துவர் இல்லாமல் நடைபெற்றதால் நரிக் குறவர்கள் வேதனை அடைந்தனர்.

ஒவ்வொரு வட்டாரத்திலும் நடமாடும் மருத்துவமனை திட்டம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்முகாமில் பங்கேற்கும் மருத்துவக் குழுவில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் இருப்பர்.

இம்முகாமில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காச நோய் போன்றவை கண்டறியப் பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். இந்நிலையில் நேற்று நடமாடும் மருத்துவமனை சார்பில் சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி பழமலை நகரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இங்கு 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப் பட்டன. ஆனால் மருத்துவர் வரா ததால், செவிலியர், உதவியாளரே பரிசோதனை செய்தனர். மேலும் அவர்களே மருந்து, மாத்திரைகளையும் வழங்கினர். மருத்துவர் வராமல் பணியாளர்கள் மருத்துவ முகாமை நடத்தியதால் நரிக்குறவர்கள் வேதனை அடைந்தனர்.

x