சாலை தோண்டும் பணிகளை நிறுத்த மாநகராட்சி திடீர் உத்தரவு!


சென்னையில் சாலை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு சேவை துறைகளாகிய சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள், கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்கள் மூலமாக மண்டலம் 1 முதல் 15 வரையிலான பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டும் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அனைத்து சேவை துறைகளுக்கும், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்களுக்கும், சாலை வெட்டு பணியை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது.

இக்காலங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலை வெட்டு மேற்கொள்ள இணை ஆணையர் (பணிகள்) வட்டார துணை ஆணையர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு) அவர்களின் மூலமாக கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையாளர் அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

x