9 ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் ‘அரண்மனை’ படக்குழுவினர்!


அரண்மனை

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் முதல் திகில் படமாக வெளியான அரண்மனை படத்தின் முதல் பாகம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் காமெடி கலந்த கதைகளை எடுக்கும் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர். சி, ரஜினி, கமல், அஜித், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில், சுந்தர்.சி முழுக்க முழுக்க காமெடி கலந்த பேய் படமாக அரண்மனை படத்தை கடந்த 2014-ம் ஆண்டு வெளியிட்டார்

அரண்மனை படத்தில் வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சந்தானம், நிதின் சத்யா, கோவை சரளா, மனோ பாலா, லட்சுமிராய் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையை அமைத்திருந்தார்.

அரண்மனை திரைப்படம்

படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்து அரண்மனை இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்நிலையில், அரண்மனை முதல் பாகம் வெளியாகி 9 வருடங்கள் நிறைவடைந்தன. இதனை படக்குழுவினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

x