பரபரப்பு... ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் பேனர்! களத்தில் இறங்கிய மாணவர் அமைப்பு!


கேரள ஆளுநர் ஆரிஃப் கான் முகமதுக்கு எதிராக பேனர்

கேரள மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு சட்டதிருத்த மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தவிர்த்து வருகிறார். இதனால் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும், கேரள முதல்வருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது.

கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் கான் முகமது

ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பல்கலை கழகங்களில் சங்கப் பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக சிபிஎம் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ மாநிலம் முழுவதும் உள்ள பல்கலை கழகம் மற்றும் கல்லூரிகளில் பேனர் வைப்பதாக அறிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

கேரள ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் எஸ்.எப்.ஐ பேனர் வைப்பு

இந்நிலையில் எஸ்.எப்.ஐ அமைப்பினர், அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே ஆளுநருக்கு எதிராக பேனர் வைத்துள்ளனர். ஆளுநர் தங்கியுள்ள பல்கலை கழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் எஸ்.எப்.ஐ. அமைப்பினர் வைத்திருந்த பேனரை போலீஸார் உடனடியாக அகற்றினர். இதனால் ஆளுநர் தரப்புக்கும், ஆளும் தரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் முற்றியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


‘அவரை எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும்...' ஆவேசமாக பதிலளித்த பிரேமலதா!

x