ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவதூறாக பேசிய விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தல்கள் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு 25 மக்களவைத் தொகுதிகள், 175 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எம்மிகானூர், மார்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் கடந்த 31ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அம்மாநில முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, ‘அரக்கன்', ‘விலங்கு', ‘திருடன்' என பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்ச்சித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் லெல்லா அப்பி ரெட்டி மற்றும் மற்றொரு நபர் சேர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆந்திர மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
சந்திரபாபு நாயுடு பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுகள் அடங்கிய வீடியோ, பென் டிரைவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், சந்திரபாபு நாயுடுவின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து,
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் விமர்சித்தது தொடர்பாக 48 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு, அம்மாநில தேர்தல் ஆணையம் சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!
இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சதி... பாகிஸ்தானியர் உள்பட மூவர் கைது!
பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை... அதிர விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்!
அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்... விரட்டியடித்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்!