தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாதுகாப்புக்கு சென்றுவிட்டு திரும்பிய போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது.
தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுவை துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருபவர் தமிழிசை செளந்தரராஜன். இன்று காலை இவருடைய பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனம், அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வாகனத்திற்கு முன்னால் இம்ரான் கான் என்பவர் காரை ஓட்டிசென்றார். அப்போது, இம்ரான் திடீரென பிரேக் பிடித்து காரை நிறுத்தினார். இதனால், பின்னால் சென்ற போலீஸ் வாகனமும் பிரேக் அடித்து நிறுத்தப்பட்டது. ஆனாலும், முன்னால் இருந்த கார் மீது போலீஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்தாலும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை.