ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9,000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை அடுத்த பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா கார் தொழிற்சாலைக்கு நேற்று அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டா லின், தெற்காசிய நாடுகளில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருவதாக குறிப்பிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் 470 ஏக்கரில் ரூ.9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த விழாவில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பங்கேற்பது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி. அவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த அவர். பெருமைக்குரிய அரசுப் பள்ளியில் பயின்று இந்தளவுக்கு உயர்ந்துள்ளளார்.

டாடா குழுமத்தின் சார்பில் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்கி வருவதால் இங்குள்ள பல்லாயிரம் இளைஞர்கள். குறிப்பாக பெண்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்தியாவில் தமிழகம் வாகன உற்பத்திக்கு தலைநகரமாக உள்ளது. நாட்டில் மின் வாகன உற்பத்தி 40 சதவீதம் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் நாட்டில் தமிழகம் 5 தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு. டாடா போல உலகளவில் பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்கள் வாகன உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் 2-வது பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.

இந்தியாவில் மட்டும் இன்றி தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

அமைச்சர்கள் துரைமுருகன். ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா, ஜெகத்ரட்சகன் எம்.பி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம், அரசு செயலாளர் அருண் ராய், ஆட்சியர் சந்திரகலா, டாடா குழும தலைவர் சந்திரசேகரன், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

x