தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!


தம்பி அண்ணாமலையிடம் கூட நான் சொன்னேன். நீங்கள் எடுத்திருப்பது போலீஸ் பயிற்சி. நான் எடுத்திருப்பது போராளி பயிற்சி. இருவரும் மோதிப் பார்ப்போமா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் சேர்த்து ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மயிலாப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்," தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது. அதனைத் தகர்த்து புதிய கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பது வரலாற்றை வாசித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியில் உள்ளோம். போட்டியிட ஆள் இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லை. நான் அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களைக் காக்க நெய்தல் படை அமைப்பேன்.

அண்ணாமலை

தம்பி அண்ணாமலையிடம் கூட நான் சொன்னேன். நீங்கள் எடுத்திருப்பது போலீஸ் பயிற்சி. நான் எடுத்திருப்பது போராளி பயிற்சி. இருவரும் மோதிப் பார்ப்போமா? என் முன்னாடி நீங்கள் ரொம்ப சாதாரணம். உங்களுக்குப் பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருவார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவார். எனக்கு எல்லாமே நான்தான். அப்ப நான்தானே கெத்து. தமிழர்களுக்கு இந்த ஒரு நிலம்தான் உனக்கும் இருக்கு. அதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்" என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து சீமான் பேசினார்.

x