மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது.
சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புரட்சி பாரதம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. புரட்சி பாரதம் கட்சி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக புரட்சி பாரதம் இணைந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அக்கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. இதனால், புரட்சி பாரதம் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். அதனால், தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபடாமல் இருந்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பூவை ஜெகன் மூர்த்தி, "வரும் சட்டமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவதாக அதிமுக தலைமை உறுதியளித்துள்ளது. அதனால், அதிமுக கூட்டணியை தொடருகிறோம். அதிமுக கூட்டணி மற்றும் கூடஅதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்" என்று தெரிவித்தார்.
தற்போது அக்கட்சி மேலும் ஒரு புதிய அறிவிப்பை புரட்சி பாரதம் அறிவித்துள்ளது. அதாவது, மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்க்கும் புரட்சி பாரதம், புதுச்சேரியில் ஆதரிக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்ப்பு, புதுச்சேரியில் ஆதரவு எனும் புரட்சி பாரதம் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!
தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!
பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!
'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!
ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!