தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!


பறை அடித்து வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மலையரசன், தலையில் விசிக துண்டை கட்டிக்கொண்டு பெண்களுடன் பறை இசை அடித்து நடனமாடி வாக்கு சேகரித்தது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வித்தியாசமான முறையில் வாக்காளர்களிடையே பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் டீக்கடைகளில் டீ போட்டுக் கொடுத்தும், வாக்காளர்களுக்கு துணி துவைத்துக் கொடுத்தும், நடனமாடியும், பாட்டுப்பாடியும், பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறை அடித்து வாக்குச் சேகரித்த கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன்

அந்த வகையில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் தனது தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குச் சேகரிப்பின் போது உணவகத்தில் தோசை சுட்டு தருவது, சந்தையில் காய்கறி விற்பனை செய்வது போன்றவற்றிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

பறை அடித்து வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன்

இந்த நிலையில், தலைவாசல் அருகே புளியங்குறிச்சி கிராமத்திற்கு வாக்குச் சேகரிக்கச் சென்ற மலையரசனுக்கு, விசிக சார்பில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது விசிக துண்டு ஒன்றை தலையில் கட்டிக்கொண்ட மலையரசன், கழுத்தில் திமுக துண்டை அணிந்து கொண்டார். தொடர்ந்து ஒரு தாளத்தை வாங்கி, பறை இசையை அடித்தார். அப்போது அங்கிருந்து ஆண்களும், பெண்களும் இசைக்கு ஏற்ப நடனமாடினர். பறை இசைத்தபடி, மலையரசனும் அவர்களுடன் உற்சாகமாக நடனமாடி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இது அப்பகுதி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

x