“நான் பணம் வாங்கியதை நிரூபித்தால் சாகவும் தயங்கமாட்டேன்” - கொந்தளித்த மதிமுக எம்எல்ஏ


படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: "ஒரு பைசா கூட மக்கள் பணி செய்கிறேன், நான் பணம் வாங்கியதாக நிரூபித்தால் சாக கூட தயங்கமாட்டேன்" என்று மாநகராட்சி கூட்டத்தில் மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் ஆதங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், கவுன்சிலர்கள் சிலரின் செல்போன்களின் ‘ரிங்’ டோன் ஒலித்தது. அதிருப்தியடைந்த மேயர் இந்திராணி, "செல்போன்களை உள்ளே கொண்டு வரக்கூடாது என்று பலமுறை கூறியும், எல்லோரும் செல்ஃ போன்களை உள்ளே எடுத்து வருகிறீர்கள். 2 மணி நேரம் கூட செல்போன்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாதா? இனி செல்போன்கள் சத்தம் கேட்டால் யாராக இருந்தாலும் அதனை பறிமுதல் செய்யப்படும்" என்று எச்சரித்தார்.

வாசுகி (மண்டலம் 1 தலைவர்): "பாதாளச் சாக்கடை பணிகள் தாமதமாக நடக்கிறது. அதற்கு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களில் ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. வார்டுகளில் எந்த பணிகைள யார் மேற்கொள்கின்றனர் என்பதே தெரியவில்லை. மண்டலத் தலைவர், கவுன்சிலர்கள் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினர் தகவல் அளிப்பதே இல்லை" என்றார்.

பணிகள் நடக்கும் இடத்தில் மாநகராட்சி அதி்காரிகள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு அதிகாரிகளை கூட பார்க்க முடியவில்லை. ஏற்கணவே, பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தரமில்லாமல் நடந்ததால் பரிசோதனை ஓட்டத்தின்போது பல இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டதை பார்க்க முடிந்தது. அதுபோல், பாதாளசாக்கடைப்பணியிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையில் கூறுகிறேன்” என்றார்.

சோலைராஜா, (அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர்): "மாநகராட்சியில் 1500 வணிக கட்டடங்களுக்கு குடியிருப்புகளுக்கான சொத்து வரி வசூலிக்கப் பட்டுள்ளது. இதை கண்டுபிடித்து ரூ.140 வசூலிக்கப்பட்ட வரி ரூ.1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதுபோல், மாநகராட்சி 100 வார்டுகளிலும் வணி கட்டிடங்களில் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடக்கிறது. அவர்களை கண்டு கொள்ளாமல்விட்டால் மாநகராட்சி வருவாய் பாதிக்கப்படும். அவர்களை கண்காணித்து, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும்" என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார்: "சொத்து வரி தொடர்பாக பொதுவான சர்வே எடுக்கிறோம். இந்த ஆய்வில், கடந்த காலத்தில் இதுபோல் சொத்து வரி குறைத்து நிர்ணயம் செய்ததை கண்டுபிடித்துளோம். இதுபோன் மாநகராட்சி பொதுநிதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்" என்றார்.

சோலை ராஜா(அதிமுக எதிர்கட்சித்தலைவர்): "சொத்து வரியை ஏமாற்றி மாநகராட்சி வருவாய் இழப்பு செய்தவர்கள் பெரும்பாலும் அரசியல் பின்னணியில் உள்ள வணிக கட்டிட உரிமயைாளர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்களே, விளையாடுவதற்கு, பொழுதுப் போக்குவதற்கு இடங்களில் இல்லாமல் மதுரையில் போதைக்கு அடிமையாகின்றனர்.

அவர்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கான விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும். செல்லுார் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 70 சென்ட் இடம் உள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் நாம்(கவுன்சிலர்கள்) நிதி திரட்டி கொடுத்தால் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கலாம். இளைஞர்கள், மாணர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

மாநகராட்சி ஆணையாளர்:"செல்லூரில் நவீன விளையாட்டு அரங்கும் அமைப்பதற்கு ரூ.5 1/2 கோடியில் நிதி பெற நடவடிக்கை எடுக்கப் படுகிறது" என்றார்.

சண்முகவள்ளி,( அ.தி.மு.க); "தன்னுடைய வார்டில் நான் பதவியேற்றது முதல் தற்போது வரை மக்கள், சாக்கடை தண்ணீரில் தான் நடமாடு கின்றனர். எங்கு பார்த்தாலும் குடிநீருட்ன சாக்கடை நீர் கலந்து வருகிறது. 3 ஆண்டாக மக்கள் படும் துன்பதற்கு மாநகராட்சி ஆணையாளர் நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்றார்.

மாநகராட்சி ஆணையாளர்; "தரமாக பணி நடக்க வேண்டும் என்பதால் அப்பணி சற்று தமாதமாகிறது" என்றார்.

இதுவரை அமைதியாக கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று இக்கூட்டத்திற்கு வந்த மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் எழுந்து பேசினார். அவர், ‘‘தன்னுடைய தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பணிகள் நடக்கிறதோ இல்லையோ சாலைகளில் குழி தோண்டிப்போட்டு செல்கிறது. குடிநீரும் சரியாக வருவதில்லை. மக்கள் இரவு 12 மணிக்கெல்லாம் போன்போட்டு திட்டு கிறார்கள். 40 ஆண்டு கால அரசியலில் பல சிரமங்களை பட்டுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆனால், மக்களுக்கான பணிகளை செய்ய முடியவில்லை என்கிறபோது கவலையாக உள்ளது.

ஆணையாளர் கூட இரவு 11 மணி, 12 மணிக்கு கூட என்னுடன் வந்து ஆய்வு செய்கிறார். மேயரும் வருகிறார். ஆனால், சம்பந்தப்பட்ட வார்டுகளுக்குட்பட்ட உதவி ஆணையர் வருவதில்லை. செல்போனை கூட எடுப்பதில்லை. ஒரு பைசா கூட வாங்காமல் மக்கள் பணியாற்றி வருகிறேன். யாராவது பணம் வாங்குகிறேன் என்று நிரூபித்தால் சாக கூட தயங்கமாட்டேன். இந்த ஆட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது என்பதற்காகதான் ஆதங்கப்படுகிறேன்" என்றார்.

ஏற்கணவே பூமிநாதன், இதே மாநகராட்சி கூட்டத்தில் ஒரு முறை, "என்னுடைய தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் சரியாக பணிகள் நடப்பதில்லை, இந்த எம்எல்ஏ பதவியை மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை, ராஜனமாக செய்யப்போகிறேன், ’’ என்று கூறியது சர்ச்சையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது" என்றார்.

மண்டலத் தலைவர்- கவுன்சிலர் மோதல்: 54வது வார்டு திமுக கவுன்சிலர் நூர் ஜஹானுக்கும், மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மற்றும் அவரது கணவர் மிசா பாண்டியனுக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மிசா பாண்டியன் கட்சியை விட்டு நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் நூர்ஜகான், "மண்டலத் தலைவர் வார்டு பணிகள் தொடர்பாக எந்த தகவலும் வழங்குவதில்லை. கலந்துரையாடுவதும் இல்லை" என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, "மண்டலக்கூட்டத்தில் கேட்டிருக்கலாமே. அங்கே பேசாமல் இங்கே பேசுவது சரியில்லை" என்றார்.

இருவரும் வாக்குவாதம் முற்றவே, அதிமுக கவுன்சிலர் ரூபினி, எழுந்து, "உங்கள் தனிப்பட்ட சண்டையை வெளியே போய் வைத்துக் கொள்ளுங்கள், மக்கள் பிரச்சனை பற்றி எங்களைப் பேச விடுங்கள்" என்றார்.

x