உச்ச நீதிமன்றத்தில் கடந்த முறை நடந்த விசாரணையின் போது மசோதாக்கள் குறித்து முதல்வரை அழைத்து பேச வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்தியக்குழு ஆய்வு முடித்த பிறகு வருவதாக முதல்வர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலுவையில் உள்ள பல்வேறு மசோக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘’மத்திய அரசின் நியமனமாக இருக்கும் ஆளுநர், 200வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள மூன்று விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். வேறு வாய்ப்புகள் இல்லை. சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
தமிழக ஆளுநருக்கும், முதலமைச்சருருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து இதைத் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம். எனவே, முதலமைச்சரை ஆளுநர் அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினர்.
இதனையடுத்து, மசோதாக்கள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாலும், மத்தியக்குழு ஆய்வில் இருப்பதாலும் புயல் பணிகள் முடிந்த பின்னர் வருவதாக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க கூறி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவு துவங்குகிறது!
அதிர்ச்சி... எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!
விஜய் முதல் குஷ்பு வரை.... திரையுலகில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்!
200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்
19 வயது இன்ஸ்டா பிரபலம் மரணம்... அறுவை சிகிச்சைக்கு பின்பு நேர்ந்த துயரம்!